ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக அயராது உழைக்கப் போவதாக இம்மாவட்டத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற எம்.பி க்கள் மற்றும் மாநகர, நகர சபை பிரதேச சபை முதல்வர்கள், தலைவர்கள்  உறுப்பினர்கள் என பலதரப் பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது சம்பந்தமான செய்தியாளர் மாநாடு நேற்று  காலை (சனி-10.00க்கு) அம்பாறை ஆரியபவன் ஹோட்டலில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத்தின் சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் பலர்  கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் உணவுப் போஷாக்கு மற்றும் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, தொழில் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ,எம்.பி க்களான ஸ்ரீயானி விஜய விக்ரம, பி.எச்.பியசேன முன்னாள் மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ன ராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினரும், கல்முனைத் தொகுதி ஸ்ரீ லங்கா சு.கட்சி அமைப்பாளருமான ஏ.எம்.எம்.றியாஸ் (பெஸ்டர்), தேர்தலுக்கான மாவட்ட இணைப்பாளர் சட்டத்தரணி பாறுக் சாஹிப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 இந்நிகழ்வில் செய்தியாளர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ள மேற்படி முக்கியஸ்தர்களிடம் பலதரப் பட்ட  வினாக்களையும் தொடுத்தனர். 

கருத்துரையிடுக

 
Top