தேசத்தின் நிழல் எனும் தேசிய மரநடுகை நிகழ்வு   இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை சுப வேளை நேரமான 10.41 மணிக்கு ஆரம்பித்து வைக்கப் பட்டது. கல்முனை தமிழ் பிரிவு  பிரதேச செயலகத்தின் பிரதான நிகழ்வு  பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில்  பெரிய நீலாவணை பெரிய தம்பிரான் ஆலய முன்றலில் இடம் பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த நாளையும் பதவியேற்பினையும் நினைவு  கூரும் முகமாக வருடாவருடம் நடாத்தப்படும் தேசத்தின் நிழல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வில் திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆலயம் முன்பாக மரக்கண்றை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பெரிய நீலாவணை பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top