(ஐ.எம்.ரிஸான்)
இம்போட் மிரர்  செய்தி நிறுவனம் நடாத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இம்போட் மிரர் முகாமைத்துவப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்  பீ.எச்.பியசேன,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.நஸீர் , ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்  எம். ஏ. அன்சில் ஆகியோர்  மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவதைக் காணலாம். கல்முனை மாநகர சபை உறுப்பினர்  ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் , ஓய்வூபெற்ற ஆசிரிய ஆலோசகர்என். சும்சுடீன் உட்பட  இம்போட் மிரர் நிர்வாகிககள் காணப்படுகின்றனர் .


கருத்துரையிடுக

 
Top