பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் சமுக சேவை திணைக்களத்தின் அனுசரணையுடன்  கல்முனை-08 கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிப்பு விழா சங்கத்தின் தலைவரும் இணக்க சபை தலைவருமான எம் .எச்.எம் ஆதம்பாவா தலைமையில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில்  நேற்று நடை பெற்றது. நிகழ்வில் சமுக சேவை திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .

இதன் போது சிறந்த சேவையாற்றி ஓய்வு  பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.ஜப்பார் கௌரவிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினரால் சிரேஸ்ட பிரஜைகளுக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

வைபவத்தில் உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் இந்த நாட்டின் புதிய சிந்தனையாக கிராமங்கள் தோறும் சிரேஸ்ட பிரஜைகள் அமைப்பு உருவாக்கப்பட்டு பல வழிகளிலும் எமது முதியவர்கள் கௌரவிக்கப் படுகின்றனர். எமது கல்முனை மண்ணிலும் சிரேஸ்ட பிரஜைகள் அமைப்பு சிறப்பாக  இயங்குகின்றன. அரசினால் கிடைக்கப் பெற்றுள்ள நிதியில் அந்த அமைப்புக்களுக்கும் உதவ இருக்கின்றோம். அதே போன்று இந்த அரசாங்கம் இந்த சிரேஸ்ட பிரஜைகளின் நலன் கருதி இந்த ஆண்டுக்கான வரவு  செலவு  திட்டத்தில் பெருந் தொகையான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் மூலம் கல்முனை பிரதேசத்திலுள்ளவர்களுக்கு சுய தொழிலுக்காக 70 இலட்சம் ரூபாவும் , அதே நேரம் நாளை மறுதினம் 18 ஆந் திகதி வறிய குடும்பங்களுக்கு 90 இலட்சம் ரூபா நிதியினை பணமாகவும் வழங்கி வைக்கவுள்ளோம் என கல்முனைக் குடியில் நேற்று நடை பெற்ற சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிப்பு விழாவில் திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். கருத்துரையிடுக

 
Top