நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று வியாழக்கிழமை கல்முனைக்கு  விஜயம் செய்தார். உணவு போஷாக்கு அமைச்சர் பி.தயாரத்ன, தொழில் துறை பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, வட மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் சகிதம் வருகை தந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ பல்வேறு நிகழ்வுகளிலும் பொது வைபவங்களிலும் கலந்துகொண்டார். 

கல்முனை மாநகருக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைபாளரும் கல்முனை மா நகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் பெருவரவேற்பு அளிக்கபட்டது. 

இந்த நிகழ்வில் பெருமளவு இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்வின் பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் சிறிதுநேரமே உரையாற்றினார். 

அதே வேளை  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் கல்முனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயதையும் திறந்து வைத்தார் 

Post a Comment

 
Top