கொழும்பில் நேற்று  நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் முடிவுகளின்றிக் கலைந்து போயுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று இறுதி முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்னொரு தடவை மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன் பின்னரே முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர்பீடம் கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இறுதி முடிவை எடுக்கும் என்றும் குறித்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவு கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

 
Top