(சுரேஸ்)
மனிதனாக பிறந்த அனைவருக்கும் உள ரீதியான ஏற்றத் தாழ்வுகள் இருப்பது இயற்கை அதனை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளில் ஊக்கப்படுத்துனர்கள் பெரிதும் பங்கு ஏற்கின்றனர்  அதிலும் மாற்றுத் திறனாளிகளாக வாழ்கின்றவர்களது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை வளர்த்து ஊக்கப்படுத்தும் நோக்கில் ஈ.யூ நிதியுதவியில் கன்டிகப் மற்றும்
கமிட் அமைப்புக்கள் நடைமுறைப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ்  சித்தாண்டி,கிரான் கிராமத்தில் வாழும் யுத்தத்தினாலும் பிறப்பினாலும் பாதிப்பிற்குள்ளான வலது குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உளஆற்றுப்படுத்தல் பயிற்சி கமிட் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர்  எம்.ஜெயகுமார்  தலைமையில் சத்துரு கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியின் போது உள ஆற்றுப்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் உள வளத்துறையின் பயிற்றுவிப்பாளர்களான அ.ஜெயநாதன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கையில்  முன்னேற வேண்டிய வளங்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் எவ்வாறான சவால்களை எதிர் நோக்கி வெற்றி கொள்ள வேண்டும் வலது குறைவின் தடைகள் அதன் அகவளம்,புறவளம் என்பது பற்றி பயிற்றுவிப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

 
Top