தேசிய சமாதானப் பேரவை ஏற்பாடு செய்திருந்த இன, மத வேறுபாடுகளின் அடிப்படையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு  தேசிய சமாதானப் பேரவையின்  மாவட்ட குழுவின் அங்கத்தவரும் எகெட் ஹரிதாஸ் அமைப்பின் பணிப்பாளருமான  அருட்தந்தை. ஜெரோம் டீலீமா தலைமையில் சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்  சமன் செனவிரத்தின,பொருளாளர்  எஸ். ஜெயசிங்கம்,சிரேஸ்ட திட்ட இணைப்பாளர்  றசிக்கா செனவிரத்ன திட்ட உத்தியோகத்தர்  அப்துல் அமான் ஆகியோர்  கலந்து கொண்டு அமைப்பின் தற்கால பங்குகள் மற்றும் செயற்பாடுகள், திட்டத்தின் அறிமுகம், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு போன்ற விடயங்கள் தொடர்பாக விபரித்து கலந்துரையாடப்பட்டதுடன் இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வ மத ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், சர்வ மத தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
கருத்துரையிடுக

 
Top