சுரேஸ்
தற்காலத்தில் பெண்களின் அழகுக்கலை தொழில் என்பது மிகவும் பாரிய வருமானம்மிக்க ஓர் சுயதொழிலாக அமைந்து வருகின்றது அந்தவகையில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் வாழும் பெரும்பாலான இளம் பெண்கள் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் வீட்டுப் பணிப்பெண்களாக வெளி நாடு சென்று பெரிதும் கஸ்டங்களுக்குள் ஆளாகின்றனர் அவ்வாறான பெண்களது சுய தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ் நாட்டு நிதியுதவியில் மட்டக்களப்பு ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசடித்தீவு சக்திமகளீர் இல்லத்தில் பெண்களுக்கான மூன்று மாதகால அழகுக் கலைபயிற்சி நெறி அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் வ.கமலதாஸ் தலைமையில் ஆரம்பநிகழ்வு இன்று (25) நடைபெற்றது.

இப்பயிற்சி நெறியினை  ஆரம்பித்து வைக்கும் வகையில் சுவிஸ் நாட்டு ஸ்டாசொலிடார்டி அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஆதிரியன் மற்றும் அவரது பாரியார் அத்துடன் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்அதிபர் ரீ.தியாகராஜா, அழகுக்கலை பயிற்றுனர் வி.சித்ரா ஸ்டாஅமைப்பின்உத்தியோகத்தர்எஸ்.ரஞ்சித்வீ.வாமதேவன்,ஆர்.பிரபாகினிஆகியோர்கலந்துகொண்டுபயிற்சிநெறியினைஉத்தியோகபூர்வமாகஆரம்பித்துவைத்தமைகுறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top