சுரேஸ்
மாற்றுத்திறனாளிகளது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் பலதன்னார்வ தொண்டர்  நிறுவனங்களின் விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் நிதி மற்றும் பொருள் உதவிகளைமட்டும் வழங்கி இருந்தாலும் அவர்களுக்குரிய பயிற்சிகள் கண்காணிப்புக்கள் சரியான முறையில் செயற்பட வேண்டும். அந்தவகையில் ஈ யூ நிதியுதவியில் கன்டிகப் நிறுவனம் இணைந்து கமீட் அமைப்புடன் செயற்திட்டதை நடை முறைப்படுத்தும் மாற்றுத் திறனாளிகளது வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்,தொழில் முக்கியத்துவம், உள ஆற்றுப்படுத்தல், ஆகிய செயற்பாடுகளை கடந்த மூன்று வருடமாக  நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் ஒருபகுதியாக இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான தொழில் வழிகாட்டல்  மற்றும் தொழில் முக்கியத்துவம் தொடர்பான இரண்டுநாள் கொண்ட பயிற்சி கிரான் ரெஜீ கலாச்சார மண்டபத்தில் கமீட் அமைப்பின் திட்ட வெளிக்கள உத்தியோகத்தர்  எம்.ஜெயகுமார்  தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையின் வெளிக்கள உத்தியோகத்தர்  ஏ.ஆர் .மேரியன் அமைப்பின் செயற்பாடுகள் திட்டங்கள் தொடர்பான விபரத்ததுடன் தொழில்சார்  ஊக்குவிப்புதுறையின் தேர்ச்சி வாய்ந்த வளவாளர்  எஸ்.சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் முக்கியத்துவம் தொடர்பாக பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது. கருத்துரையிடுக

 
Top