லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டப்பகுதியில் புதிய வீடு ஒன்றிற்கான தளம் வெட்டும்போது மேலிருந்த பாரிய கல்லொன்று வீழ்ந்ததில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கல் தளம் வெடிக்கொண்டிருந்த நபரின் மீது வீழ்ந்ததால் அவரின் கால்கள் அதனுள் இறுகிக் கொண்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எஸ்.விஜயகுமார என்ற 4 பிள்ளைகளின் தந்தையே பாதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மட்டும் பொலிஸார் ஆகியோர் இணைந்து அவரை மீட்கும் பணியில் ஈடுப்பட்டபோதும் அவரை மீட்க முடியாத காரணத்தினால், பெக்கோ இயந்திரத்திரத்தை பயன்படுத்தி குறித்த நபரை மீட்டுள்ளனர்.
சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு பின் இவரை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட நபர் உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கருத்துரையிடுக

 
Top