( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் 10 இலட்சம் மரம் நடும் 'தயட்ட செவண ' ( தேசத்திற்கான நிழல் ) நிகழ்வையொட்டி,  கல்முனை  பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மரம் நடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை கிறீன்பீல்ட் பூங்காவில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்கரம ஆராய்ச்சியின் பணிப்பில்  கிராம  சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.லாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்,  கிராம சேவகர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிறீன் பீல்ட் கூட்டு முகாமைத்துவ ஆதன குழுவின் தலைவர் போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top