( தகவல் , படம் -ஏ.எல்.எம்.சலீம் - சிரேஸ்ட செய்தியாளர் )
நாட்டின் தலை நகரான கொழும்பில் தொடர்மாடிவீடுகளைஅமைத்து மக்களின்  நம்பிக்கையை வென்ற கோறல் மென்ஷன்  ( CORAL  MANSION   ) கூட்டு நிறுவனத்தின்  பத்தாவது தொடர்மாடி வீட்டுத் திட்டம்  மற்றும் தமது தொடர் மாடிகள் தொடர்பான அறிமுக நிகழ்வு  ஒன்று சாய்ந்தமருது சீ பிறீஸ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு பத்துவருடங்களில்  தாம் கொழும்பு மட்டக்குளியில்  அமைக்கவிருக்கும்  10வது தொடர்மாடிவீட்டுத் திட்டம்  தொடர்பில்  இந்தவிசேடஅறிமுக நிகழ்வு   இடம் பெற்றது.
ஐங்கரன் மீடியா சொலுசன் நிறுவனத்தினரின்  சிறந்த ஏற்பாட்டில் நிகழ்ந்த  இந்த நிகழ்வில் கல்முனை மாநகரத்திலுள்ள வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும்  சட்டத்தரணிகள் , வைத்திய அதிகாரிகள் , உயர் உத்தியோகத்தர்கள்,ஊடகவியலாளர்கள்  எனபலரும் கலந்துகொண்டனர்.
இந்த அறிமுக நிகழ்வில் கோறல் நிறுவனத் தலைவர்  டாக்டர் பிரபாசுப்பிரமணியம்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்மாடி இல்லங்கள் தொடர்பிலும்  நிறுவன செயற்பாடுகள் ,உத்தரவாதம் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
முகாமைத்துவப் பணிப்பாளர் வசீகரன், திட்டமுகாமையாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் ஐங்கரன் மீடியா நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் என்.கார்த்திக் , விஸ்தரிப்பு பிரிவுத் தலைவர் ரஜீவ் முத்துலிங்கம் ,பங்குதாரர் சரோ தாஜூடீன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top