இம்போட்மிரர் ஊடக நிறுவனம் நடாத்திய அம்பாறை மாவட்ட மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வு நிறுவனத்தின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நேற்று (09) அட்டாளைச்சேனை லெயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சசூர், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோர் கலந்து கொண்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.Post a Comment

 
Top