மட்டக்களப்பு இளைஞர்களது கல்வி மற்றும் கலாச்சாரங்கள் யுத்தத்தின் பின்னர் எவ்வாறான   வளார்ச்சியில் முன்னெடுத்துச் செல்கின்றமை தொடர்பாக  கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கான ஊடகம்,கலாச்சாரம் மற்றும் கல்விக்குப் பொறுப்பானஅமரிக்க மத்தியநிலையத்தின் பணிப்பாளர்  நிகோல் சுலிக் நேற்று மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவரும் ஸ்டாசொலிடார்டிஅமைப்பின் பணிப்பாளாருமான வ.கமலதாஸ் தலைமையில் இந்து இளைஞர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டபலரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது இச்சந்திப்பு ஸ்டாசொலிடார்டிஅமைப்பின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது ஸ்டாசொலிடார்டிஅமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் விபுலானந்தாஅழகியல் கற்கைநிறுவனத்தின் மாணவர்கள், இந்து இளைஞர்  ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மற்றும் பிரத்தியோக கல்வி வகுப்புமாணவர் கள் பலர்  கலந்து கொண்டு அவர்களது கல்விவளர்ச்சியில் ஏற்படும் பிரச்சினைகள் சமூகத்தின் மத்தியில் எவ்வாறான சமயபிரச்சினைகள் பிரிவினைகள் தொடர் பாககலந்துரையாடியதுடன் ஸ்டாசொலிடார்டிஅமைப்பின் செயற்பாடுகள் சம்மந்தமாக பணிப்பாளர் வ.கமலதாஸினால் விபரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top