கல்முனை மாநகர சபை   மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் 2014.11.20 அன்று நடைபெற்ற குழுக்களைத் தெரிவு செய்வதற்கான  கூட்டத்தில் அடுத்த (2015) ஆண்டுக்கான நிதிக்குழுத் தெரிவும் நடைபெற்றது, 
இதில் பதவி வழியில் மேயர் உட்பட 06 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த உறுப்பினர்களைத் தெரிவு செய்ய நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் பிரதிநிதிகள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை.
பெரும்பான்மை முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட கல்முனை மாநகர சபையில்  வாக்கெடுப்பு நடைபெற்றால் தமிழ் பிரதிநிதிகள் எவரும் தெரிவு செய்யப்பட முடியாது என்று தெரிந்திருந்தும் , கடந்த கால சம்பிரதாயங்கள் பின்பற்றப்படாமல் இந்தத் தெரிவு நடைபெற்றமையானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்நிதி குழுவை வாக்கெடுப்பின்றி. தமிழ் பிரதிநிதிகளையும் இனணத்து சுமூகமாக தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு இவ்வாறு செயற்பட்டு தமிழ் பிரதிநிதிகள் எவரையும் இணைத்துக் கொள்ளாதது  அவர்களின் கபடத்தனத்தை வெளிக்காட்டுகின்றது.
தமிழ், முஸ்லிம் நல்லுறவு பற்றியும் ஐக்கியம் பற்றியும் பேசி வரும் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு இரட்டை வேடம் போடாது கல்முனை மாநகர சபையில்   தமிழ் பிரதிநிதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்,
இவ்வாறு  கல்முனை மாநகர சபை   உறுப்பினர் ஏ,எம். றியாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top