மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அமைச்சு தேசிய ரீதியில் “செழிப்பான இல்லம்” எனும் தொனிப் பொருளில் வீடுகளை புதுப்பிப்பதற்கு ரூபா 10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக முதற் கட்டமாக திவிநெகும உதவி பெறும் குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா கொடுப்பனவு  வழங்கும் நிகழ்வு  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய  மண்டபத்தில் இன்று (18) இடம்பெற்றது.

கல்முனை  பிரதேச திவிநெகும  அதிகாரி  ஏ.ஆர்.எம். சாலிஹ்  தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு இக்கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக  நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் மௌலவி ஏ.எல்.நசீர்கனி ,திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா உட்பட  பயனாளிகள்  பலரும் கலந்து கொண்டனர் .
Post a Comment

 
Top