யுத்தத்தின் பின்னர் இன >மத ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சர்வமத தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் தங்குமிட விடுதியில்  ஐக்கிய அமரிக்க இராஜதந்திர நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளரும் ஆசியநாடுகளுக்கான பணிப்பாளருமான க்ளின்டன் டஸ் பிறவூன் தலைமையில் இன்று 21 நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில்  இலங்கைக்கான அமரிக்கா தூதுவராலயத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான பிரதிநிதி சியாபான்ஓட்ஸ்ஐக்ஸ் கலந்துகொண்டதுடன் அம்பாரைமாவட்டத்தின் சர்வமத ஒன்றியத்தின் முஸ்லிம் பிரதிநிதி அஸ்வர்  மௌளவி>பௌத்தமததலைவர் ரண்முத்துகல சங்கரத்ன தேரர்  காத்தான் குடி முஸ்லிம் சம்மேளத்தின் தலைவரும் நல்லிணக்ககுழுவின் தலைவருமான எம்.மூபீன் மற்றும் மட்டக்களப்புமாவட்ட இந்து மதத்லைவா;களும் கலந்துகொண்டுமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

 
Top