பி. முஹாஜிரீன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மூன்றாவது முறையாகவும் அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதஉல்லா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வின் எழுச்சி செழிப்பான இல்லம் திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான ரூபா 2 ஆயிரத்து 500 முதற்கட்ட கொடுப்பனவு  மற்றும் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு  செலவுத் திட்டத்தின் சுமார் 50 இலட்சம் ஒதுக்கீட்டின் மூலம் அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு பிரதேசத்தில் தெரிவு  செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம்  பள்ளிக்குடியிருப்பு அல் பாயிஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசியாவின் முதல் மனிதனாகத் திகழ்கின்றார். அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழக்கைத்தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.கருத்துரையிடுக

 
Top