மகிந்த சிந்தனை பொங்கி எழும் இக்காலகட்டத்தில் கல்முனையில் உள்ள வலயக் கல்வி அலுவலகத்துக்கு செல்லும் வீதி படு மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதை கவனிப்பார் யாருமின்றி காணப் படுகின்றது .

கடந்த ஒருவருடத்துக்கு முன்னர்  கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி அமைச்சர்  உதுமா லெப்பை இவ்வீதியை பார்வையிட்டார் .அதன் பின்னர்  அவரது செயலாளர் பார்வையிட்டார் அதன் பின்னர் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் பார்வையிட்டார்  ஆனால்  எதுவும் நடந்ததில்லை .

எதிர்வரும்  டிசம்பர் 02ஆந்திகதி வலயக் கல்வி அலுவலகத்துக்கான புதிய கட்டிடத்துக்கான  அடிக்கல் நாட்டும் வைபவத்துக்கு இவ்வீதியால் பிரதம அதிதியாக கிழக்குமாகாண ஆளுநர் வருகை தரவுள்ளார். அன்றைய தினம் வலயக் கல்வி அலுவலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் இந்த வீதியில் வீதி மறியல் போராட்டம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கும் நடவடிக்கை இல்லாவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக  கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும்  கல்முனை இஸ்லாமாபாத் கிராம மக்களும்  , வீதிக்கு இறங்கவுள்ளதாக இஸ்லாமாபாத் கிராம முக்கியஸ்தர்களும் , வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர் . 

கருத்துரையிடுக

 
Top