இலங்கை வங்கிக்கு 75வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்  கல்முனை இலங்கை  வங்கி கிளையில்  வங்கி வாடிக்கயாளர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கி வைக்கும்   நிகழ்வு  வங்கி முகாமையாளர் எம்.எல்.எம்.ஸாஹிர்  தலைமையில்  இடம் பெற்றது . இந் நிகழ்வில்  மாவட்ட முகாமையாளர் பிரியந்த குமார  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வாடிக்கையாளர்களுக்கு  மரக்கன்றுகளை வழங்கி வைத்தார் .

வங்கி உதவி முகாமையாளர் திருமதி ரீ. ஜஹ்பர் ,நிறைவேற்று அதிகாரி ஏ.எம்.எம்.முஸ்தகீன் , உட்பட வங்கி உத்தியோகத்தர்களும் ,வாடிக்கயாளர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top