மட்டக்களப்பு வாலிபர் கிருஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயனாளிகள் மற்றும்  சுய தொழில் முயற்சியாளர்களுக்கான சுய தொழில் மூலமாக பொருளாதாரத்தை ஊக்குவித்தல் தொடர்பான கள அவதானிப்பு செயற்பாடு நேற்று  அமைப்பின் வெளிக்களஉத்தியோகத்தர்  பயஸ் கிருசாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இக்கள நிகழ்வில்  வவுணதீவூ ,மணிபுரம்,ஆயித்தியமலை, இலுப்படிச்சேனை ஆகியபிரதேசங்களில் வை.எம்.சீ.ஏ அமைப்பின் மூலமாக அடிப்படை மட்ட சுய தொழில் ஊக்குவிப்புதொடர்பான பயிற்சிகள் பெற்ற சுய தொழில் முயற்சியாளர் பலர்  கலந்துகொண்டதுடன் இச்செயற்பாட்டிற்கு பால்நிலை தொடர்பான உத்தியோகத்தர்  எம்.லாவணியா கலந்து கொண்டதுடன் 
அத்துடன் இக்களஅவதானிப்பு நிகழ்வின் மாவட்டமட்டத்தில் சுய தொழில் மூலமாக பலசவால்களை தாண்டி வாழ்வில் முதற்படியில் வந்துள்ள பெண் முயற்சியாளர்களை அனுபவப்பகிர்வு பெற்றுக் கொண்டதுடன் மருதமுனை தும்புதொழிற்சாலை ,நெசவு தொழில் செயற்பாட்டாளர்கள்  மற்றும் சரீரம் இலங்கை தேசியமன்றம் ஆகிய இடங்களுக்குச் சென்று  தொழில் மேம்பாடு ,சேமிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
கருத்துரையிடுக

 
Top