ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று 29-11-2014 மாலை முக்கிய சந்திப்பொன்று
இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் பசில்  ராஜபக்ஸ தலைமையிலான குழுவுடன்  மீண்டும் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள பிரதான நிபந்தனைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்;.பியுமான ஹசன் அலி மற்றும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஷமற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர்.
அண்மையில் அமைச்சர் பசில்  ராஜபக்ஸ தலைமையிலான குழுவுடன் சந்திப்பு இடம்பெற்று  சில தினங்களின் பின்னர்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மௌனமாக இருக்கப் போவதாக தீர்மானித்ததாக அதன் உயர் பீட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

 
Top