கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டப் பகுதியில் சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த கல்முனை மாநகர சபை நிருவாகத்தை கண்டித்து இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் .

கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப் படும் இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திற்கான மலசல கழிவகற்றல் தொகுதி அமைப்புக்காக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவன் அக்குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த குழி நிர்மாணப் பணியில் கல்முனை மாநகர சபை  பாதுகாப்பு வேலி  அமைக்காது  பொடு போக்குடன் செயல் பட்டதனாலே சிறுவனின் உயிர் பறிக்கப் பட்டதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அம்மக்கள் மேற் கொண்ட எதிர்ப்பு ஊர்வலம் இஸ்லாமாபாத் கிராமத்திலிருந்து கல்முனை மாநகர சபை வரை சென்றது . ஆர்ப்பாட்டத்தில் சென்றவர்கள் கல்முனை மாநகர சபை நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்ட காரர்கள்  சிறுவனின் உயிர் பறிப்புக்கு காரணமான கல்முனை மாநகர சபை முதல்வரை கைது செய்,ஒப்பந்த காறரை கைது செய் என்ற கோசங்களை எழுப்பினர் . 

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ஆர்ப்பாட்டம் செய்தவர்களை களைந்து செல்லுமாறு உத்தரவிட்டும்  உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு காரணமான கல்முனை மாநகர சபை பொறுப்பு கூற வேண்டும் என்று  கோஷமிட்டனர் . அதன் பின்னர் பொலிஸ்  பொறுப்பதிகாரி மாநகர ஆணையாளரை சம்பவ இடத்துக்கு அழைத்து மக்களுக்கு பதில் கூறுமாறு பணித்தார் .

இந்த மலசல கழிவு  குழி நிர்மாணப் பணி  கொடுக்கப் பட்டுள்ள ஒப்பந்த காரர்  மாநகர சபையுடன் உடன் படிக்கை செய்துள்ளார்  அந்த உடன்படிக்கையின் படி மரணித்த சிறுவனின் குடும்பத்துக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப் படும் என மாநகர ஆணையாளர்  தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்தனர் . கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கூறும் போது  மரணித்த சிறுவனின்  சடலத்தையும், சம்பவ இடத்தையும் பார்வையிட்ட  கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிபதி  இதற்கான  சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மணித்துள்ளார் . நீதிபதியின் கட்டளை பிரகாரம் இதனுடன் சம்பந்தப் பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார் .கருத்துரையிடுக

 
Top