திருமலை றபாய்தீன்.
 சென்னை தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவக்குழு    புதிய “பிராணா” கருத்தரிப்பு நிலையத்தின் தகவல் மையத்தை திருகோணமலை   மாவட்டத்தில் அறிமுகம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை இன்று  வருகை  தந்திருந்தனர். இலக்கம் 5 வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள மம்மா கெயா
மகப்பேற்று தனியார் வைத்தியசாலையில். குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் 20க்கு மேற்பட்டோரை முதற்கட்டமாக சந்தித்து ஆலோசனை வழங்கினர். 
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த  பிராணா மையத்தின் இயக்குனரும் கருத்தரிப்பு மகப்பேறு மற்றும் மகளிர் நல தலைமை மருத்துவருமான டி.ஜி.சிவரஞ்சனி
தகவல் தருகையில்  குழந்தைப் பேறு இல்லாதோர்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு எமது மருத்துவ மனை தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை மருத்துவ சேவையில் சிறப்புற செயல்பட்டு
வருகிறது. நவீன உலகின்  வாழ்வியல் மாற்றங்களுக்கு மத்தியில் கருவுறாமை மற்றும் மகப் பேறுயின்மை எனும் குறைபாடு பெரும் இன்னலாகவே உள்ளது.தாய்மையடைவதே
பெண்மையின் முழுத்தன்மைக்கு அடிகோலாக இருக்கிறது.

அடிப்படையில் “குழந்தை”  அல்லது “கருவுறாமை” என்பது திருமணமான தம்பதியினர் தனது குழந்தையை ஈன்றெடுக்க ஏற்படும் கால தாமதம் அல்லது இடையூறு என்று கூறலாம் ஆனால் இயற்கையில் இது ஒரு குறைபாடு அல்ல.தீர்க்கக் கூடிய ஆனால் சிக்கலான ஒரு பிரச்சினையே ஆகும்.

இச்சிகிக்சையின் மூலம் குழந்தையின்மை என்று முத்திரையிடப்பட்ட தம்பதியினருக்கு மறுவாழ்வு  அழிக்க முடியும். உண்மையில் கருவுறாமை
என்பது பெண்களின் குறைபாடு மட்டும் அல்ல இது ஆண்களால் 35 வீதமும் பெண்களால் 35 வீதமும் இருபாலாராலும் 20 வீதமும் கடைசியாக 10 வீதம் விவரிக்க முடியாத அல்லது ஊகிக்க இயலாத காரணிகளால் உண்டாகிறது.

குழந்தையின்மையின் மூலக்காரணத்தை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து நவீன மற்றும் புதிய மருத்துவ தொழிநுட்பங்கள் மூலம்
அவற்றைச் சரிசெய்து மகிழ்ச்சியான வாழ்வினைப் பெறலாம் என்பதில்
சந்தேகமில்லை. உலகின் பல்வேறு குழந்தையின்மை சிகிச்சை முறைகளை மிக்க நுண்ணியத்தோடு ஒரே இடத்தில் வழங்கி தாய்மை அடையச் செய்வதே எங்களது இலக்கு என டாக்டர் சிவரஞ்சனி கூறினார்.

கருப்பையில் விந்துட்டி கருகட்டல்இவெளிச்சோதனை முறை கருக்கட்டல் இசைட்டோபிளாஸத்தினுல் விந்தணு உட்செலுத்துதல்இசைட்டோ
பிளாசத்தினுல் தேர்ந்தெடுக்கப்பட்ட விந்தணு உட்செலுத்துதல் இபிளாஸ்டோசிஸ்ட் வளர்ப்பு,கரு இணை அடைகாத்தல்,கரு மற்றும் விந்தணுவை குறை வெப்ப நிலையில் பாதுகாத்தல்,கரு வாடகைத்தாய் செயல்முறை  போன்ற மருத்துவ சிகிச்சை முறைகள்,அறுவை
சிகிச்சை முறை, நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழிநுட்பம் போன்ற சிகிச்சை எம்மால் வழங்கப்படும் என்றார்.

திருகோணமலை பொது வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் டாக்டர் சபா ஜெயக்குமார் கூறுகையில் குழந்தையின்மையினால் பல குடும்பங்கள் பிரிந்து வாழுகின்றனர்.தகுந்த மருத்துவ ஆலோசனைகளின்றி அனாவசியமாக பணங்களையும் வீண்விரயம் செய்து  பலனின்றி
பலர் அலைகின்றனர். இதனால்தான் சமூக நலனாகவும் சேவை மனப்பாங்குடன் திருகோணமலையிலும் “ப்ராணா” தகவல் மையத்தின் ஊடாக எமது மக்களுக்கு சேவை வழங்கவுள்ளோம் என்றார்.இவ்வாறான தகவல் மையம் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,கொழும்பு,ஏறாவூர், கம்பளை,பதுளை போன்ற இடங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top