எம்.ரீ .எம்.பாரீஸ்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மீராவோடை அமீர்  அலி வித்தியாலயத்தின் 4 வது பரிசளிப்பு விழா மீராவோடை  பொதுச் சந்தை அமீர்  அலி கேட்போர் கூடத்தில் வித்தியாலயத்தின் அதிபர்  எம்.மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்றது.  இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர்  அலி கலந்து கொண்டார்.

ஏனைய சிறப்பதிகளாக வலயக்கல்வி பணிப்பாளர்  ஏ.எம்.அஹமட் லெவ்வை,ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்  கே.பீ.எஸ்.ஹமீட்,ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர ஏ.எல்.மீராசாஹிப்,அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர்  மௌலவி எம்.எம்.எஸ்.ஹாரூன் ஸஹ்வி,மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எம்.ரீ .எம்.அஸ்ரப்,ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்  எச்.எம்.றுவைத்,கிழக்கு மாகாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.ஏ.ஜப்பார்,உள்ளிட்ட முக்கிய கல்வி அதிகாரிகள் பலரும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும்,மாணவர்களும்,பெற்றௌர்களும் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளினால் மாணவர்களை பாராட்டி நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன் போது மாணவர்களின் விஷேட கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் ஓட்டமாவடி இணக்க சபை தலைவரும் கல்குடா பிரதேச ஹஜ்,உம்ரா வழிகாட்டியுமான இல்லியாஸ் மௌலவி அவர்களும் மாணவர்களும் இணைத்து  “உம்ரா செய்வது எப்படி” என்பது தொடர்பான செய்முறை விளக்கங்களை ஒரு விபரண காட்சியாக செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது. 
கருத்துரையிடுக

 
Top