க.பொ.சாதரணதரம் 2014 பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாதம் 3ஆம் திகதியுடன் நள்ளிரவு 12.00 தொடக்கம் பரீட்சை நிறைவுறும் வரை பரீட்சார்த்திகளுக்கான பொது வகுப்புக்கள் நடத்துதல்- கருத்தரங்குகள் நடத்துதல் மாதிரிப் பரீட்சை வினாக்கள் அச்சிடுதல் - விநியோகித்தல்- சுவரொட்டிகள்- பதாகைகள் மற்றும் இலத்திரனியல்- அச்சு ஊடகங்களினூடாக பிரபலப்படுத்துதல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு தனிநபர்- நிறுவனத்தினால் இதற்கெதிராக செயற்படுவோர் இருப்பின் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கு கீழ்வழங்கப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு முறைபாடு செய்யுமாறு பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறு கிளை - 0112784208 / 112784537
உடனடி இலக்கம் (ப.தி)- 19111
பொலிஸ் தலைமையகம்- 0112421111
அவசர இலக்கம் 119

கருத்துரையிடுக

 
Top