அகில இலங்கை  ரீதியில்  நடை பெற்ற ஆசிரியர் மெய் வல்லுநர் போட்டியில் பங்கு பற்றி பதக்கங்களை வென்று கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களுக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கௌரவிப்பு  இடம் பெற்றது .
ஆசிரியர்களான  நிந்தவூரை சேர்ந்த ஐ.எல்.எம்.இப்ராஹீம் ,பாண்டிருப்பி சேர்ந்த என்.பிரசாந்தன் ,சாய்ந்தமருதை சேர்ந்த றிஸ்மி மஜீட் ,மருதமுனை சேர்ந்த ஐ.எல்.எம்.ஜின்னா ,நட்பிட்டிமுனையை சேர்ந்த ஏ.பீ.கலீல்  ஆகியோரை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே .பிரபாகரன் பாராட்டி கௌரவித்தார் .
வெவ்வேறு வயது அடிப்படையில் இடம் பெற்ற  போட்டிகளில்  பங்கு பற்றிய இவர்கள் ஐவரும்  கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமையை சேர்த்துள்ளனர் . ஐ.எல்.எம்.இப்ராஹீம் 200மீட்டர் .100 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் 02 தங்கப் பதக்கங்களையும் ,400 மீட்டர் ஓட்டப் போட்டியில் 01 வெள்ளி பதக்கத்தினையும் ,என்.பிரசாந்தன் 4x 100 அஞ்சல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் ,உயரம் பாய்தலில் 01  வெள்ளிப் பதக்கத்தையும் ,4x 400 மீட்டர்  அஞ்சல் ஓட்டத்தில் 01 வெண்கலப் பதக்கத்தையும் ,400 மீட்டர் ஓட்டத்தில் 01 வெண்கலப் பதக்கத்தையும் ,றிஸ்மி மஜீட் 100 மீட்டர் ஓட்டத்தில் 01 வெள்ளிப் பதக்கத்தையும் ,ஐ.எல்.எம்.ஜின்னா 4x 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில்  01 தங்கப் பதக்கத்தையும் 4x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் 01 வெண்கலப் பதக்கத்தையும் ,ஏ.பீ.கலீல் பரிதி வட்டம் வீசுதலில் 01 வெண்கலப் பதக்கத்தையும் பெற்று இந்த பெருமையை சேர்த்துள்ளனர் .

இவ்வருடம் நடை பெற்ற ஆசிரியர் மெய் வல்லுநர் போட்டியில்  கல்முனை கல்வி வலயத்துக்கு 11 பதக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன .கடந்த ஆண்டு நடை பெற்ற  ஆசிரியர் மெய் வல்லுநர் போட்டியில் நாகலிங்கம் பிரசாந்தன் 05 தங்கப் பதக்கங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

 
Top