திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முன்மொழிவினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்; ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்ட நற்பிட்டிமுனையில் அபிவிருத்தித் திட்டங்களை அங்குராh;ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வூ இன்று (31) இடம்பெற்றது. 

நற்பிட்டிமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்  யூ.எல்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தாh;.

இதில் நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவா; அஷ்ஷெய்க் நாசிர் கனி, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்  ஷரீப் ஹக்கீம், பிரத்தியேக செயலாளா; எம்.ஏ.ஜின்னா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்  பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா;.

இதன்போது நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி வீதி அபிவிருத்திகளான வீ.வீ. வீதி, அனார்  கரீம் வீதி அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் அபிவிருத்தித் திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்  40 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்   கருத்துரையிடுக

 
Top