இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், நிழல் கல்வி பிரதி அமைச்சருமான ஏ. முஹம்மட் முஜீப் அவர்கள் ஏற்பாடு செய்து அண்மையில் நடைபெற்ற 2012/2013ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட, க.பொ.த. சாதாரணதரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான “எமது மண்ணின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா 2014” விற்கு பின்புலமாக இருந்து கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ .ல.மு.கா. மக்கள் பிரிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களையும், ஊடகதுறையில் பங்களிப்புச் செய்த ஊடகவியலாளர்களான யூ.எம்.இஸ்ஹாக், எஸ்.எம்.எம்.றம்ஸான் மற்றும் எம்.வை. அமீர் ஆகியோரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (8) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ .ல.மு.கா. மக்கள் பிரிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் வுக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், நிழல் கல்வி பிரதி அமைச்சருமான ஏ. முஹம்மட் முஜீப் நினைவுச் சின்னம் வழங்கி வைத்ததோடு ஊடகவியலாளர்களான யூ.எம்.இஸ்ஹாக், எஸ்.எம்.எம்.றம்ஸான் மற்றும் எம்.வை. அமீர் ஆகியோர்களுக்கு நன்றி கடிதங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மலர்குழுடி சார்பாக அதன் தலைவர் எஸ்.எம்.நபீல் முஹம்மட், உறுப்பினர்களான எஸ்.ஆர்.பிர்னாஸ், ஏ.ஆர்.எம்.தானிஸ், எம்.எச்.எம்.சர்ஜுன் மற்றும் எம்.வை.எம்.யூசுப் இம்றான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
கருத்துரையிடுக

 
Top