அரசாங்கத்தினால் சத்துணவூத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணப்   பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பால்பக்கட்டுக்கள் பழுதடைந்தனவாக உள்ளன. கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வினியோகிக்கப்பட்ட பால்பக்கட்டுக்கள் ஊதிக் காணப்படுவதாகவும்  மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன. இதனை பரிசோதித்த சுகாதாரப் பரிசோதகர்கள் இப்பால் பக்கட்டுக்களில் கிருமி தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலை தொடர்பு கொண்டு கேட்ட போது  குறித்த விடயத்தை கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் அப்துல் நிசாமின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top