திருக்கோவில் பிரதேச கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு, தினகரன் பத்திரிகை ஒப்புநோக்குனரும் லேக்ஹவுஸ் இந்து மாமன்ற உறுப்பினருமான த.சுஜீவன் தலைமையில், தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (13)  நடைபெற்றது. 


லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன்  இந்துமா மன்றம்   இணைந்து நடாத்திய ஊடக செயலமர்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில் தினகரன் தினசரி  பத்திரிக்கையின் செய்தி ஆசிரியர் கே.குணராசா, வாரமஞ்சரி பத்திரிக்கையின் செய்தி ஆசிரியர் விசு கருணாநிதி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவின் பணிப்பாளர் எம்.என்.ராஜா மற்றும் செய்தி ஆசிரியர்களான கே.அசோக்குமார், கே.ஈஸ்வரலிங்கம், மகேஸ்பிரசாத், உள்ளிட்டோர் வளவாளர்களாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.கருத்துரையிடுக

 
Top