2014ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலங்கை யாத்திரீகர்களை ஏற்றிய முதலாவது விமானம் இன்று மு.ப 11.45 மணியளவில் புறப்பட்டுள்ளது.
குறித்த விமானம் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஜித்தா விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இதன்போது யாத்திரீகர்களை வழியனுப்புவதற்காக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் சமீல் நளீமி மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஹஜ் யாத்திரீகர்களை ஏற்றிய மற்றுமொறு விமானம் இன்று மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இன்று மாத்திரம் சுமார் 70 பேர் மக்காவிற்கு பயணமாகியுள்ளனர். இன்று முதல் இம்மாதம் 29ஆம் திகதி வரை இலங்கைக் ஹாஜிகளை ஏற்றிய விமானங்கள் புனித மக்கா நோக்கி பயணிக்கவுள்ளன. இந்த வருடம் இலங்கையில் இருந்து 2,240 பேர் ஹஜ் யாத்திரீகையினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top