கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவுகளின் கடற்கரை பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரிச்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலுக்கடியில் 22.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலவெசி தீவுகளில் உள்ள தென்கிழக்கு மோண்டாயாங் பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top