நற்பிட்டிமுனை ஜூம்மா பள்ளிவாசலின் அலுவலகத்திற்கு கணனி தொகுதியை கொள்வனவு செய்யும் பொருட்டு   மெஸ்றோ சமூக சேவைகள் அமைப்பு ஒரு இலட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பாக ஞாயிற்றுக்கிழமை (07) வழங்கியுள்ளது.

நற்பிட்டிமுனை ஜூம்மா பள்ளிவாசலுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிருவாக குழுவினர் மெஸ்றோ சமூக சேவைகள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவரும், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளருமான மௌலவி ஏ.எஸ்.நாஸிர்கனி தலைமையில் இடம்பெற்ற இந்நிதி வழங்கும் நிகழ்வில் மெஸ்றோ சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், தற்போதைய தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நஸீல், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.அன்சில்,  உட்பட பள்ளிவாசல் நிருவாக அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top