சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின்  அம்பாறை மாவட்டக் கவு ன்சிலினால் நடாத்தப்பட்ட பல்லின இளைஞர்களுக்கான சமய புரிந்துணர்வு  முழு நாள் செயலமர்வு   இன்று சனிக்கிழமை கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது.

பேரவையின் தலைவரும்  சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் அமையத்தின் தலைவருமான  டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்  தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில்  அம்பாறை மாவட்டத்திலுள்ள  இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவ ,பௌத்த மதங்களைச் சேர்ந்த  100 இளைஞர்,யுவதிகள்  கலந்து கொண்டனர்.

இளம் தலைமுறையினரிடையே தத்தமது சமய நம்பிக்கையை ஏற்படுத்தும்  அதே வேளை  ஏனைய சமயங்களைப் பற்றிய அறிவை வளர்ப்பதும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதும்  இம்மாநாட்டின் நோக்கமாக இருந்துது.

நிகழ்வில் சமயத் தலைவர்களும்,புத்தி ஜீவகளும் கலந்து கொண்டதுடன் வளவாளர்களினால் இந்து சமய உள்ளீடுகள் ஒரு நோக்கு, பௌத்த சமய தோற்றமும் நம்பிக்கையும், கிறிஸ்தவத்தின் தோற்றமும் நம்பிக்கையும், இஸ்லாமும் அதன் சமாதான சகவாழ்வு  அணுகு முறை என்ற தலைப்புக்களில் விரிவான விரிவுரைகள் நடாத்தப்பட்டன.
கருத்துரையிடுக

 
Top