கல்முனை நியூஸ் இணையதளமும் வாழ்த்துகிறது 


இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட கல்முனை உவெஸ்ஸி உயர்தரப்பாடசாலையின் அதிபர் வ.பிரபாகரன் அவர்களுக்கு வரவேற்பும் கௌரவிப்பும் இடம் பெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.கலையரசனின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு அதிபரையும் அவரது பாரியாரையும் வரவேற்றதோடு பாராட்டிக் கௌரவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் போதகர் அல்லாத ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

அதே வேளையில் இலங்கையின் 52ஆவதும், தமிழ் பேசும் இனத்தில் 17ஆவது உப தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை கௌரவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சார்பில் எஸ்.எம்.எம். ரம்ஸான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் . கருத்துரையிடுக

 
Top