கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  கமு/இஸ்லாமாபாத்  முஸ்லிம் வித்தியாலயத்தில் குருளை சாரணர் ஆரம்பிக்கப் பட்டு சாரணர் முகாம் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது . கல்லூரி அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் முன்னாள் சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாவின் நெறிப்படுத்தலில்  இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டு பாசறையை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கி வைத்தார் .

கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான  ஏ.சி.எம்.தௌபீக்,எஸ்.எல்.ஏ.ரஹீம் ஆகியோரும்  வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஜுனைதீன்  ஆகியோரும் கல்லூரி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். 


கருத்துரையிடுக

 
Top