அம்பாறை - உஹன இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
நேற்று மாலை குறித்த இராணுவ வீரர் கடமையில் இருக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
 
பதுளை பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.  பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top