கிழக்கிலங்கையில் தொடரும் மின் தடை குறித்து இலங்கை மின்சார சபையின் கவனத்துக்கு கொண்டு வர சாத்வீக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..!  
கிழக்கு பிரதேசங்களில் தொடரும் மின்சார தடை குறிப்பாக மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும்அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகிறது. இத் தடை வாரத்தில் சனி,ஞாயிறு நாட்க்களில் தொடராக தடை செய்வதேடு மட்டுமின்றி ஏனைய நாட்களிலும் இத் தடங்கல்  ஏற்பட்டவாறே தான் இருக்கின்றது, மக்கள் இந்த அவல நிலை காரணமாக கடும் துயரங்களுக்கு சொந்தக்காரர்களாக ஆகியுள்ள பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மின்சாரத் தடை குறிப்பாக  கிழக்கு பிரதேசமான (மட்டகளப்பு  கல்முனைநிந்தவூர்சம்மாந்துறை, அக்கரைபற்று பொத்திவில்) போன்ற ஏனைய பிரதேசங்களில்  தொடர்ந்து ஏற்பட்டுவருவதன் காரணம்தான் என்ன..?  இதற்கு நிரந்தரமானதீர்வை இன்று வரைக்கும் இலங்கை மின்சார சபை கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இம்மின்சாரத் தடைக்கு மின்சார சபை நீண்டகாலமாக தெரிவித்துவரும் நியாயங்கள். திருத்த வேலைகள் காரணம், தண்ணீர், பெட்ரோல், டீசல், போன்ற பற்றாக்குறைகளினால் மின் தடை ஏற்பட்டு வருவதாக மக்களிடம் குறை கூறுகின்றனர்,
திருத்த வேலை காரணமாக மின் தடை ஏற்படுவதை ஒரு நியாய கருத்தாக ஏற்று கொள்ளுமாயின் அதற்குரிய மாற்று மின் வழங்கு முறை கையாளப்படுவதில்லை ஏனென்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.!      
இக் குறைகளை மக்களிடம் எடுத்து கூறும் மின்சார சபையினர் இத் துறை சார்ந்த அரசதரப்புக்களுக்கு எடுத்துக் கூறி மக்களுக்கு ஒழுங்கான முறையில் மின்சாரம் பெற்றுத் தராததன் காரணம்தான் என்ன..? இது போன்ற அப்பாண்டமான குறைகளை மக்களிடம் தொடர்ந்து எத்திவெய்க்குமாயின் இதை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில்  இன்று மக்கள் இல்லை என்பதை. நன்கு அறிய முடிகிறது.  
இந்த தொடர் மின் தடை மாணவர்களின் கல்வி, வர்த்தக நடவடிக்கைகள் உட்பட மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் கூடபாதிக்கப்பட்டு வருவதையடுத்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே மக்களாகி நாம் தொடரும் இந்த அவல நிலை குறித்து நாம் நமக்குள்ளேயே நொந்து கொண்டிருப்பதைவிட உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் சாத்வீக நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
முஹம்மட்ஜெலீல்
நிந்தவூர்.

கருத்துரையிடுக

 
Top