இலங்கையையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகவே உள்ளது, காரணம் அங்கு புதிய வகுப்பு மாணவர்களை முதுநிலை வாகுப்பு மாணவர்கள் (ராகிங்)  எனும் பெயரில் மிகவும் கொடூரமான முறையில் பகிடிவதையில் ஈடுபடுத்துவதாக தென்கிழக்கு பல்கலைக்கழக புதியவகுப்பு மாணவ மாணவிகள் சிலர் மனவேதனையுடன் தெரிவிக்கின்றார்கள். அந்தவகையில் இன்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் நிலை பற்றி பெற்றோர்கள் மிகவும் கவலைசூழ்ந்துள்ளனர்.

இப் பகிடிவதைக்கு ஆண் மாணவர்கள் மட்டுமின்றி பெண் மாணவிகளும் உட்படுத்தபடுகின்றார்கள் எனும் போது பெற்றோர்களிடையில் தமது பிள்ளைகளின் கல்வியை விட உயிர்தான் மேல் என்று நிலையில் கல்வி மேல் வெறுப்பினை உண்டுபண்ணும் நிலைக்கு தள்ளபட்டுவருகின்றது. அந்தவகையில் தமது பெண் பிள்ளைகள் மாத்திரமின்றி ஆண் பிள்ளைகளுக்கும் இனி கல்வியே வேண்டாம் என்ற நிலைக்கு பெற்றோர்கள் மனைங்களில் கல்வி மேல் வெறுப்பு சூலமிட்டு எரிகின்றது.இதனால் இன்று கல்வி பின்தள்ளபட்டேவருகின்றது.   

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்துஎதிர்காலக் கனவுடன் பல்கலைக்கழகம் செல்லும் மாணவனுக்கு.. இரக்கத்தனமற்ற பகிடிவதைஅதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் கொடுமைகள் இன்னும் நீண்டுகொண்டேதான் செல்கின்றன.

இந்த கீழ்த்தரமான பகிடிவதைகள் மாணவர்கள் மத்தியில் இன்று மட்டுமல்ல அன்று தொட்டு ஆண்டாண்டு காலமாக நடைபெற்றவாறேதான் இருக்கின்றது இது எந்த கருமாதி பிடித்தவர்கள் கொண்டுவந்த பழக்கவழக்கமோ தெரியவில்லை இதை இன்றைய மாணவர்களும் பகிடிவதை என்னும் பெயரில் அவர்களின் வாழ்க்கையை சீரழித்துகொன்டிருக்கின்றனர்
இவ் மிருகத்தனமான பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகமோ அரசாங்கமோ இது வரை காலமும் எந்தவொரு தடுப்பு சட்டமும் கொண்டுவரவில்லை என்பது வேதனைக்குரிய விடையமாகவேயுள்ளது.

இது போன்ற பகிடிவதைகளை சட்டரீதியாக தடுக்கப்படவில்லயாயின் இதை மாணவர்களாகிய நீங்கள் ஏன் உணர்ந்து நிறுத்திகொள்வதில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது..?      

பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் இப் பகிடிவதைகளினால் உங்கள் கல்வி,எதிர்காலத்தை தொலைப்பதோடு மாத்திரம்மின்றி எதிர்காலத்தில் தேன்றவிருக்கு மகான்களின் கல்வியையும் 
தொலைத்துக்கொண்டிருக்கிண்றீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

இப் பகிடிவதை போன்ற செயல்களை அடியோடு நிறுத்திவிட்டு உங்கள் கல்வி, எதிர்காலம் பெற்றோர்களின் கனவு போன்றவற்றை நிறைவேற்றி பாருங்கள் உங்கள் எதிர்காலம் சிறந்து விளங்கும்.


முஹம்மட் ஜெலீல் 

நிந்தவூர்.

கருத்துரையிடுக

 
Top