சேவல் கூவி  பொழுது விடியும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விடயம் . மாறாக முட்டையிட்டு அடைகாக்கும் பேட்டுக் கோழி கூவிக் கொண்டிருக்கும் அதிசயம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் இடம் பெறுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக  சம்மாந்துறை விளினயடி வீதியில் வசித்துவரும்  அட்டாளைச்சேனை மக்கள் வங்கி கிளையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிகின்ற  கபீர் என்பவரது வீட்டிலேயே இந்த அதிசய நிகழ்வு இடம் பெறுகிறது .

தற்சமயம் அடைகாத்துக் கொண்டிருக்கும் இந்த பேட்டுக் கோழி  சேவல் கூவுவது போன்று சிறகடித்து கூவிக் கொண்டிருக்கிறது . 

கருத்துரையிடுக

 
Top