குருநாகல் பகுதியில் கடத்தப்பட்ட பெண்குழந்தையைத் தாம் நெரியாவ பகுதியில் இன்று புதன்கிழமை மீட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
குருநாகல் பகுதியைச் சேர்ந்த தாமரா கேஷானி என்ற நான்கரை வயதுச் சிறுமி கடந்த திங்கட்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர் என்றும், இதன்போது கூட்டு நடவடிக்கையில், பொலிஸ் அதிகாரிகள் குற்றப்புலனாய்வு பிரிவினரை இணைத்து ஒன்பது பொலிஸ் நிலையங்கள் ஊடாக தேடுதல் முடுக்கிவிடப்பட்டிருந்தது என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த சிறுமி கைவிடப்பட்ட நிலையில் குருநாகலின் நெரியாவ பகுதியில் மீட்கப்பட்டார் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

 
Top