மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைவாக திவிநெகும பயனாளிகளுக்கு “திவிநெகும சஹன அருண” விஷேட கடன் வழங்கும் நிகழ்வூ சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளா; ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்;.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கடன் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தாh;.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளா; ஏ.எல்.ஏ.மஜீத், திவிநெகும தலைமைக்காரியாலய முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், முகாமைத்துவப் பணிப்பாளா; எஸ்.றிபாயாஇ திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளா; ஏ.ஆர் .எம்.பர்ஹான், திட்ட முகாமையாளர்  எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர்களான ஏ.எம்.எம்.றியாத், முபாறக்இ எம்.யூ.ஹில்மி உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் திவிநெகும பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனார் 

இதன்போது சாய்ந்தமருதில் தெரிவு  செய்யப்பட்ட 34 திவிநெகும பயனாளிகளுக்கு தலா ரூபா 50 ஆயிரம் படி ரூபா 17 இலட்சம் வழங்கி வைக்கப்பட்டது.கருத்துரையிடுக

 
Top