கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையின் வாசிகசாலை திறப்பு 
விழாவும் தரம் 3 தரம்4 மாணவர்களின் சந்தை பொருள் கொள்வனவு நிகழ்வும் செலான் வங்கியின் அனுசரணையுடன் கல்லூரி வளாகத்தில்
முதல்வர் எம்.ஸ் ரீபன் மத்தியு
 தலமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், 
செலான் வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சிவஞானி முரரீச, கல்முனை 
கிளை முகாமையாளர் திருமதி டிறேமினி மோகன்ராஜ் , கல்லூரி பிரதி முதல்வர்கள் 
மலர்மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு வாசிகசாலை திறப்பு விழாவினை 
ஆரம்பிக்கும் முகமாக நாடாவினை வெட்டி பிரதம அதிதிகளால் திரைநீக்கம் 
செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தரம் 3, 4 மாணவர்களுக்கான சந்தை நிகழ்வும் வைபவரீதியாக அதிதிகளால் நாடாவினை வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top