‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் கல்முனை  கல்வி வலயத்திலுள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில்   நடைபெற்ற பிரதான நிகழ்வில்  கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் புஸ்பகுமார் (இனிய பாரதி ), கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை .அரபாத்  உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இதே வேளை மருதமுனை அல் -ஹம்ரா வித்தியாலயத்திலும்  நிகழ்ச்சி திட்டம் ஆரம்பித்து வைக்கப் பட்டது 

கருத்துரையிடுக

 
Top