ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது பதவிகளுக்காக அல்ல. இந்த வகையில் கல்முனை மாநகரின் பிரதி மேயர் பதவி நம்பிக்கையின் அடிப்படையிலேயே எனக்குத் தரப்பட்டது. பிரதி மேயராக எமது கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், இன்று புதிய உறுப்பினராகப் பதவிப்பிரமணம் செய்துகொண்டுள்ளவருமான ஏ.எல்.அப்துல் மஜீத்தை நியமிக்க வேண்டுமென்பதே கட்சியினதும் எல்லோரினதும் விருப்பமாகும். எனவே இதற்கு வழிவிட்டு பிரதி மேயர் பதவியிலிருந்து ஓரிரு தினங்களில் இராஜினாமாச் செய்து எமது கட்சித் தலைவரிடம் இராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பிக்கவுள்ளேன் என பிரதி மேயர் பிர்தௌஸ் தெரிவித்தார் .
 கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் எப்பொழுதும் கட்டுப்பட்டும், முழு விசுவாத்துடனும் செயற்படுபவன் நான். எமது புதிய உறுப்பினர் அப்துல் மஜீத் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஒரு பெரும் தியாகி ஆவார். அவருக்கு கட்சியால் நடாளுமன்ற உறுப்பனர்கதவியே வழங்கப்படவேண்டுமென சாய்ந்தமருது மத்திய குழுவினால் கோரிக்கை விடுத்தவன் நான். அவர் பிரதி மேயராக நியமிக்கப்படும்போது, மேலும் சிறப்பான சேவைகளை அவர் மக்களுக்கு ஆற்றுவார் என்பது திண்ணமாகும். இதேவேளை, அவர் பிரதிமேயர் பதவியைப் பொறுப்பேற்கும் போது அவரிடம் மாநகரசபை நிர்வாகம் தொடர்பிலான சில அதிகாரங்களை வரையறை செய்து வழங்குவதற்கு மேயர் முன்வரவேண்டுமெனவும் கோருகின்றேன். - என்றார்.

பதவி ராஜினாமா தொடர்பாக பிரதி மேயரின் தலைமையில் நாளை மாநகர சபை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.


கருத்துரையிடுக

 
Top