கல்முனை மாநகர சபையின் ஆளும் தரப்பான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.அப்துல் மஜீத் புதிய உறுப்பினராக இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் மாநகர சபையின் மூன்று மாதாந்தக் கூட்டங்களுக்கு தொடர்ந்து சமுகமளிக்காமையால் உறுப்புரிமை இழந்ததைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினராக அப்துல் மஜீதை முஸ்லிம் காங்கிரஸ் சிபார்சு செய்து நியமனம் செய்துள்ளது.
 புதிய உறுப்பினர் மஜீத் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் மாநகர மேயர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் முன்னிலையில் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.
 இதேவேளை புதிய உறுப்பினர் அப்துல் மஜீத் சில தினங்களில் பிரதி மேயராகவும் பதவியேற்கவுள்ளர் எனவும், இதற்கு ஏதுவாக தற்போதைய பிரதிமேயர் பிர்தௌஸ் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் உறுப்புரிமை இழந்ததைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு    நியமிக்கப் பட வேண்டியவராக     நட்பிட்டிமுனையை சேர்ந்த யு..எல் .எம்.தௌபீக் இருந்த போதிலும் அவர் விட்டுக்    கொடுத்ததன்  காரணமாகவே மஜீத் நியமிக்கப் பட்டுள்ளார் பட்டுள்ளார்

கருத்துரையிடுக

 
Top