பிரதி முதல்வராக கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படவுள்ள அப்துல் மஜீதுக்கு முதல்வரது சில அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக கடமையாற்றி இன்று ராஜினாமா செய்துள்ள எம்.ஐ.எம்.பிர்தௌஸ்  ஊடகவியலாலர்களிடம் தெரிவித்தார்.
கட்சியின் நலன்கருதியும் தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு பிரதி முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த அப்துல் மஜீத் பிரதி முதல்வராக நியமிக்கப்படுவதை பாராட்டுகின்றேன். என்று தனது வாழ்த்துக்களையும், இன்று கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போதய முதல்வர் வேலைப்பழு கூடியவராக இருப்பதனால் தனது பொறுப்புக்கள் சிலவற்றை புதிய பிரதி முதல்வருக்கு கையளிக்க வேண்டும். இந்த விடயத்தை நான் உட்பட உறுப்பினர்கள் முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் எத்தி வைக்கவுள்ளோம் எனவும் பிர்தௌஸ் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top