கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை  பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றுவதை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிர்லியன் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று  நடை பெற்றது  .

கல்முனை பிர்லியண்ட் கழகத்துக்கும் காத்தான்குடி சண் றைஸ் கழகத்துக்குமிடையே  உதை  பந்தாட்டப் போட்டி இடம் பெறவுள்ளது . போட்டியில் எஹியா அரபாத் 200வது போட்டியை சந்திக்கின்றார் . இந்தப் போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் கல்முனை பிர்லியண்ட் கலக்கம் வெற்றி பெற்றது 
கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வுககளில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் >கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்  கௌரவ அதிதியாகவும் > கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர் 

இந்த நிகழ்வில் யஹியா அரபாத் 200வது உதய் பந்தாட்டம் என்ற சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்  விசேட நினைவு சின்னம் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டார்.  


கருத்துரையிடுக

 
Top